×

மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

மால்கன்கிரி: ஒடிசா – சட்டீஸ்கர் மாநில எல்லையில் அமைந்துள்ள ஜின்னெலிகூடா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக மால்கன்கிரி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் நேற்றிரவு ஒடிசா மாநில போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு மாவோயிஸ்டுகள் இருப்பது தெரியவந்தது. அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாவோயிஸ்டுகளும் துப்பாக்கிசூடு நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில், ஒரு மாவோயிஸ்டு கொல்லப்பட்டார். காவல்துறையை சேர்ந்த தமரு படநாயக் என்பவர் படுகாயமடைந்தார். அவரை மீட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 2 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Maoist shooting ,Malkangiri ,Maoists ,Jinnelikuda forest ,Odisha-Chhattisgarh ,Odisha State Police ,Dinakaran ,
× RELATED தெலுங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்டர்