×

அமெரிக்காவில் நடவடிக்கை எடுக்கப்படும்போது இந்தியாவில் ஏன் தயங்குறீங்க.. உடனே அதானியை கைது செய்ய வேண்டும் : ராகுல் காந்தி ஆவேசம்!!

டெல்லி: முறைகேடு செய்யும் தொழிலதிபர் அதானியை பிரதமர் மோடி 100 சதவீதம் பாதுகாத்து வருவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்துள்ளது. அதானிக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அமெரிக்காவில் அவருக்கு எதிராக எழும்பியுள்ள புகார் இந்திய அரசியலிலும் விவாதப்பொருளாகியுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; தொழிலதிபர் அதானியை பிரதமர் மோடி 100 சதவீதம் பாதுகாத்து வருகிறார். கவுதம் அதானியை பிரதமர் மோடி பாதுகாப்பது ஏன்?. அதானியை மோடி பாதுகாப்பதால் அரசின் விசாரணை அமைப்புகள் எதுவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. முறைகேடு புகார்கள் உள்ளபோதும் அதானி சுதந்திரமாக வலம் வருகிறார்.

அதானி முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும். முறைகேட்டில் தொடர்புடைய செபி தலைவர் மாதவி புரி புச்சையும் பிரதமர் மோடி பாதுகாத்து வருகிறார். முறைகேடு வழக்கில் அதானியை கைது செய்ய வேண்டும். அமெரிக்காவில் நடவடிக்கை எடுக்கப்படும்போது இந்தியாவில் ஏன் அதானி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை?. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

The post அமெரிக்காவில் நடவடிக்கை எடுக்கப்படும்போது இந்தியாவில் ஏன் தயங்குறீங்க.. உடனே அதானியை கைது செய்ய வேண்டும் : ராகுல் காந்தி ஆவேசம்!! appeared first on Dinakaran.

Tags : India ,US ,Adani ,Rahul Gandhi ,Delhi ,Congress ,Modi ,P ,United States ,Gautam Adani ,
× RELATED “வேண்டும், வேண்டும்.. விவாதம்...