அறந்தாங்கி அருகே நாகுடியில் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை

அறந்தாங்கி, நவ. 21: அறந்தாங்கி அருகே நாகுடியில் குடியிருப்பு கடைதெருவில் சுற்றிதிரியும் பன்றிகளால் தொல்லை பன்றிகள் சுற்றிதிரிவதை கட்டுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நாகுடியில் சுற்றிதிரியும் பன்றிகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும், பன்றிகளால் தொல்லையும் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். நாகுடி கடைவீதியில் சுற்றிதிரியும் பன்றிகள் வாகனம் ஏதும் சாலையில் செல்லும் போது பன்றிகள் வழி தெரியாமல் கடைகளுக்கு உள்ளே சென்று விடுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். பன்றிகள் அசுத்தமாக குடியிருப்பு கடைவீதியிகளில் சுற்றிதிரிவதால் தொற்று நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். இதனால் நாகுடியில் சுற்றிதிரியும் பன்றிகளை கட்டுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அறந்தாங்கி அருகே நாகுடியில் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: