×
Saravana Stores

நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்காததை கண்டித்து வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 450க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்கவும் நிவாரண நிதி கேட்டும் ஒன்றிய அரசை கேரள அரசு வலியுறுத்தியது. இதுவரை கேரள அரசின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை.

இந்தநிலையில் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகளின் சார்பில் வயநாடு மாவட்டத்தில் நேற்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய முழு அடைப்பு போராட்டம் மாலை 6 மணி வரை நடந்தது. இதனால் வயநாடு மாவட்டம் முழுவதும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பஸ் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. வயநாட்டுக்கு சுற்றுலா வந்த பயணிகள் மாவட்ட எல்லையிலேயே காத்துக் கிடந்தனர்.

 

The post நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்காததை கண்டித்து வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Thiruvananthapuram ,Suralmalai ,Mundakai ,Wayanad district ,Kerala ,
× RELATED நிலச்சரிவு பாதிப்புகளுக்கு நிவாரண...