×
Saravana Stores

கும்பகர்ணன்- தொழில்நுட்ப வல்லுநர் விமானத்தை கண்டுபிடித்தது பரத்வாஜ் முனிவர்: உ.பி. ஆளுநர் புது விளக்கம்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஷ்டி மொழி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆனந்தி பென் படேல் பேசுகையில், “பண் டைய இந்தியாவின் முனிவர்கள் மற்றும் அறிஞர்களின் குறிப்பிடத்தக்க அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்னும் நமக்கு பெருமை சேர்த்து வருகின்றன. முதன்முதலில் வேதகால முனிவர் பரத்வாஜ்தான் விமானத்துக்கான ஒரு யோசனையை வழங்கினார். ஆனால் அது ரைட் சகோதரர்களின் கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ராமாயணத்தில் ராவணனின் சகோதரர் கும்பகர்ணன் முதல் ஆறு மாதங்கள் தூங்குவான், பின் ஆறு மாதங்களில் விழித்து கொண்டிருப்பான என நம்பப்படுகிறது. ஆனால் உண்மை அது இல்லை. கும்பகர்ணன் உண்மையில் ஒரு தொழில்நுட்ப வல்லுநர். அவர் ஆறு மாதங்களாக தன் ஆய்வகத்தில் ஆராய்ச்சிகள் செய்து பல இயந்திரங்களை உருவாக்கினான். பிற நாடுகள் தங்கள் நாடு மீது தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை தடுக்க கும்பகர்ணன் ஆறு மாதங்கள் மறைந்திருந்து ரகசியமாக இவ்வாறு இயந்திரங்களை வடிவமைத்தான்” என பேசினார். அவரது பேச்சு தற்போது விவாத பொருளாகி உள்ளது.

The post கும்பகர்ணன்- தொழில்நுட்ப வல்லுநர் விமானத்தை கண்டுபிடித்தது பரத்வாஜ் முனிவர்: உ.பி. ஆளுநர் புது விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Kumbhakarnan- Technologist Invents ,Sage Bharadwaj ,U.P. ,Governor ,Lucknow ,Anandi Ben Patel ,Khwaja Moinuddin Chishti Language University ,Lucknow, Uttar Pradesh ,India ,
× RELATED உ.பி. விவசாய நிலத்தில் 1857ம் ஆண்டு வாள், ஆயுதங்கள் கிடைத்தது