திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பெரும்பாலான அரசு சேவைகள் டிஜிட்டல் மயமாகி வருகிறது. நீதிமன்றங்களிலும் இ பைலிங் உள்பட பல சேவைகள் நவீனமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் இன்று தொடங்கப்படுகிறது. இங்கு ஜாமீன் எடுப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவரோ, ஜாமீன்தாரரோ இந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை.
அதற்குரிய ஆவணங்களை ஆன்லைனில் தாக்கல் செய்தாலே போதுமானதாகும்.இந்த நீதிமன்றத்தில் மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நேரிலோ அல்லது காணொலி மூலமாகவோ ஆஜராகலாம். காணொலி மூலமாகவே நீதிமன்றத்தின் எல்லா நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்யலாம்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான சம்மன்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு ஆன்லைன் மூலமாகவே அனுப்பப்படும். நீதிமன்ற கட்டணங்களை இ பேமென்ட் மூலம் கட்டலாம். இந்த நீதிமன்றத்தில் ஒரு மாஜிஸ்திரேட்டும், மூன்று ஊழியர்களும் இருப்பார்கள். கம்ப்யூட்டர், கேமராக்கள் உள்பட நவீன கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
The post இந்தியாவிலேயே முதல்முறையாக கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் இன்று தொடங்குகிறது appeared first on Dinakaran.