செங்கல்பட்டு: செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் நாளை, நாளை மறுநாள் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவில் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் (21.11.2024) நாளையும், மதுராந்தகத்தில் வருவாய் கோட்டாட்சியர், செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஆகியோர் தலைமையில் (22.11.2024) நாளை மறுநாள் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் கோட்டங்களில் 2 நாட்கள் காலை 11 மணியளவில் நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு, தங்கள் குறைகளை கூறி உரிய விவரங்கள் மற்றும் பதில்களை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் appeared first on Dinakaran.