- புதுக்கோட்டை மாவட்டம்
- புதுக்கோட்டை
- கலெக்டர்
- அருணா
- கடற்றொழில் மற்றும் மீனவர் நலத்துறை
- பிரதம
- வர்ணா மீன் பண்ணை
புதுக்கோட்டை, நவ.19: புதுக்கோட்டை மாவட்டத்திலல் நன்னீர் வண்ண மீன் வளர்ப்பு பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (PMMSY) 2021-22 நடுத்தர அளவிலான நன்னீர் வண்ணமீன் வளர்ப்பு பண்ணை அமைத்திட பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீடு ரூ.8 லட்சம் என்ற அளவில் 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. (மானியத் தொகை ரூ.3.2 லட்சம்) பண்ணை அமைத்திட விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் உவர்நீர் இறால் வளர்ப்பு பண்ணை அமைத்திட பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீடு ரூ.14 லட்சம் என்ற அளவில் 40 சதவீத மானியத்தில் (பண்ணை அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் சேர்த்து மானியத்தொகை ரூ.5.6 லட்சம்) வழங்கும் திட்டத்தின்கீழ் ஆர்வமுள்ள விவசாயிகள் புதுக்கோட்டை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கூடுதல் விவரம் பெற்று விண்ணப்பம் சமர்ப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அலுவலக முகவரி, உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பிளாட் எண்.1, டவுன்நகரளவு எண்: 233/1 அண்னை நகர், நிஜாம் காலனி, விஸ்தரிப்பு, புதுக்கோட்டை – 622 001. அலுவலக தொலைபேசி எண்: 043-22266994 ஆகும்.இந்த தகலை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் வண்ண மீன் வளர்ப்பு பண்ணை அமைக்க மானியம் appeared first on Dinakaran.