×
Saravana Stores

காட்டுப்பன்றி இறைச்சி விற்ற முதியவருக்கு ₹80 ஆயிரம் அபராதம்

கெங்கவல்லி, நவ.22: வீரகனூர் பேரூராட்சி, ஏரிக்கரை அருகே காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக, ஆத்தூர் கோட்ட வனஅலுவலர் ஆரோக்கியராஜ் சேவியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், கெங்கவல்லி வனச்சரக அலுவலர் சிவக்குமார், பிரிவு வனவர் தனபால், வனக்கப்பாளர்கள் பெரியசாமி, ரபிதா பேகம், விஜயகாந்த் அடங்கிய வனத்துறையினர் மாறுவேடத்தில் சென்று பன்றி இறைச்சி விற்கும் கடையில் கறி கேட்டுள்ளனர். அப்போது உரிமையாளர் தங்கவேல் (64) என்பவர் மறைத்து காட்டுப்பன்றி கறியை கொடுத்துள்ளார். அப்போது, மாறு வேடத்தில் இருந்த வனத்துறையினர், அவரை பிடித்தனர். பின்னர், காட்டுப்பன்றி இறைச்சியை விற்பனை செய்தது தொடர்பாக அவருக்கு ₹80 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

The post காட்டுப்பன்றி இறைச்சி விற்ற முதியவருக்கு ₹80 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Aathur ,Division Forest Officer ,Arogyaraj Saviar ,Veerakanur ,Forest Officer ,Sivakumar ,Divisional Forester ,Thanapal ,Forest Guards ,Periyasamy ,
× RELATED பள்ளிக்கு செல்லவிடாமல் மாணவர்களுக்கு தொந்தரவு