- கடலோர காவல்படை
- கன்னியாகுமரி மாவட்டம்
- கன்னியாகுமாரி
- கடலோர காவல்படை குழு போலீஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
கன்னியாகுமரி, நவ.22: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 48 மீனவ கிராமங்களையொட்டி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஆண்டுதோறும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 மீனவ கிராமங்களை ஒட்டிய கடற்பகுதியில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையை நேற்றுமுன்தினம் காலை தொடங்கினர்.
கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இந்திய கப்பல் படை, கடலோர காவல் படை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார், தமிழ்நாடு காவல்துறை, சுங்கத்துறை போலீசார் ஆகியோர் இணைந்து அதிநவீன படகுகள் மூலம் கடல் பகுதியில் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் அசம்பாவித சம்பவங்களை தடுக்க முன் கூட்டியே எச்சரிக்கையாக எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பாதுகாப்பு ஒத்திகை நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
The post கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் அதிநவீன படகுகள் மூலம் கடலோர பாதுகாப்பு படை கண்காணிப்பு தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஒத்திகை appeared first on Dinakaran.