கே.வி.குப்பம், நவ.22: கே.வி.குப்பத்தில் நடந்த அவசர கூட்டத்தில் அனுமதி பெற்ற வீடுகளுக்கு மட்டுமே குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். கே.வி.குப்பம் பிடிஓ அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கான அவசர கூட்டம் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமா தலைமையில் நடந்தது. பிடிஓக்கள் பெருமாள், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் புதிதாக வீடுகள் கட்ட பணிகளை தொடங்கும் உரிமையாளரிடம் கட்டிட வரைபடம் பெற்று, ஊராட்சி நிர்வாகம் மூலம் அனுமதி அளித்த பிறகு வீடுகள் கட்ட அனுமதிக்க வேண்டும்.கட்டிட வரைபடம் இல்லாமல், அனுமதி பெறாமல் இருந்தால், வீடுகளை கட்ட அனுமதிக்க கூடாது. அதேபோல் ஏற்கனவே அனுமதி பெறாமல் கட்டியுள்ள வீடுகளுக்கு தற்போது அனுமதி வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். முறையாக அனுமதி பெற்று கட்டிய வீடுகளுக்கு மட்டுமே குழாய் இணைப்பு, மின்இணைப்பு ஆகியவை வழங்க வேண்டும். அனுமதி இல்லாமல் கட்டிய வீடுகளுக்கு ஊராட்சி சார்பில் எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு அனுமதி பெறாமல் கட்டிய வீடுகள் தொடர்பாக கணக்கீடு செய்து அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என உதவி இயக்குனர் உமா உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் துணை பிடிஓக்கள், மண்டல பிடிஓக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post அனுமதி பெற்ற வீடுகளுக்கு மட்டுமே குழாய் இணைப்பு உதவி இயக்குனர் உத்தரவு கே.வி.குப்பத்தில் அவசர கூட்டம் appeared first on Dinakaran.