அன்று மட்டும் 3,173 விமானங்கள் இயக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 5 லட்சத்தைத் தாண்டியது இதுவே முதல்முறை. ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்ட 3,173 விமானங்களின் ஆக்கிரமிப்பு 90 சதவீதத்திற்கு மேல் இருந்தது. அதே நேரம் சரியான நேரத்தில் விமானத்தை இயக்கியதில் இண்டிகோ நிறுவன விமானங்கள் 74.2 சதவீதமாகவும், அலையன்ஸ் ஏர் 71 சதவீதமாகவும், ஆகாசா ஏர் 67.6 சதவீதமாகவும், ஸ்பைஸ்ஜெட் 66.1 சதவீதம், ஏர் இந்தியா 57.1 சதவீதமாகவும் இருந்தது.
அதே போல் அக்.27 முதல் ஒவ்வொரு வாரமும் 25,007 விமானங்களை இயக்க விமானப்போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. கடந்த மேமாதம் நாடு முழுவதும் உள்ள 125 விமான நிலையங்களில் இருந்து வாரத்திற்கு 24,275 புறப்பாடுகளை விட தற்போதை குளிர்கால விமான இயக்கத்தின் எண்ணிக்கை மூன்று சதவீதம் அதிகம். அதே போல் 2023 அக்டோபர் குளிர்கால அட்டவணையை கணக்கிடுகையில் விமான இயக்கம் எண்ணிக்கை 5.37 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குளிர்கால விமானபோக்குவரத்து அட்டவணை அக்டோபர் 27 முதல் 2025 மார்ச் 29 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்திய உள்நாட்டு போக்குவரத்தில் புதிய மைல்கல் ஒரே நாளில் 5.05 லட்சம் பேர் விமானத்தில் பயணித்து சாதனை: 3,107 விமானங்கள் இயக்கம் appeared first on Dinakaran.