இடிந்து விழும் நிலையில் உள்ள அளக்குடி விஏஓ அலுவலக கட்டிடத்தை அகற்ற வேண்டும்

 

கொள்ளிடம், நவ.16: கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த விஏஓ அலுவலக கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் விஏஓ அலுவலக கட்டிடம் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தில் உள்புறம் மற்றும் வெளிப்புற சுவர்களில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. கட்டிடத்தின் உள்பகுதியில் மேற்கூறையில் உள்ள சிமெண்ட் காரைகள் கீழே பெயர்ந்து விழுந்து மழை நீர் உள்ளே கசிந்து வருகிறது.

இதனால் அலுவலர்கள் ஊழியர்கள் உள்ளே அமர்ந்து பணி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. முக்கிய பதிவேடுகளையும் வைத்து பாதுகாக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. மழை பெய்து வருவதால் மேலும் மேலும் தண்ணீர் கசிந்து கட்டிடத்திற்கு உள்ளே வருகிறது.இதனால் கட்டிடம் பலம் குன்றி வருகிறது. எனவே இக்கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதியதாக விஏஒ அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்டிடம் கட்டும் வரை தற்காலிக கட்டிடத்தில் அலுவலகம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

The post இடிந்து விழும் நிலையில் உள்ள அளக்குடி விஏஓ அலுவலக கட்டிடத்தை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: