நிலக்கோட்டை குல்லிசெட்டியபட்டியில் கூடுதல் வகுப்பறை பணி துவக்கம்

 

நிலக்கோட்டை, நவ. 16: நிலக்கோட்டை ஒன்றியம், குல்லிசெட்டியபட்டி கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவுப்படி பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்படு திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் கணினி அறை உள்பட 3 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கரிகாலபாண்டியன் பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய உதவி பொறியாளர் முருகன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் ஜான்போஸ்கோ, ஒன்றிய பொறுப்பாளர்கள் வேல்முருகன், பாலசந்திரன், செல்வம், மலையாளம், மாணவரணி பொறுப்பாளர் அமுல்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post நிலக்கோட்டை குல்லிசெட்டியபட்டியில் கூடுதல் வகுப்பறை பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: