பெரம்பலூர், நவ.14: தமிழ்நாடு முதலமைச்சர் நாளை 15ஆம் தேதி அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் புதியத் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசுத் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வதுடன், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று 14ஆம்தேதி மாலை சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு திருச்சிக்கு வந்து, காரில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வருகை தர உள்ளார்.
அதனைத்தொடர்ந்து, நாளை (15ஆம் தேதி) அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடை பெறும் அரசு நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 27புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 456 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார். மேலும், பெரம்ப லூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 11,721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், தமிழ்நாடு முதலமைச்சர் விழாப் பேரூரை ஆற்றவுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் இவ் விழாவில் தமிழக அமைச்சர்கள், நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலாளர்கள், அரசு உயர் அலுவலர் கள்,உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் 11,721 பயனாளிகளுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் appeared first on Dinakaran.