செந்துறை டீ கடையில் பல்லி இருந்த போண்டா சாப்பிட்ட மூவர் மயக்கம்

அரியலூர், நவ. 14: செந்துறை டீ கடையில் பல்லி இருந்த போண்டா சாப்பிட்ட மூவர் வாந்த, மயக்கத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறையில், உடையார்பாளையம் சாலையில் பேக்கரி கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு போண்டா, வடை உள்ளிட்ட பலகாரங்களுடன் டீ, காபியும் விற்கப்படுகிறது. இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்நிலையில், அந்த கடையில் செந்துறையை சேர்ந்த வேல்முருகன் மகன் தமிழ்அழகன்(16), ராமசந்திரன் மகன் ராகுல்(16), பச்சமுத்து மகன் முத்துமாறன்(14) ஆகியோர் நேற்று போண்டா வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது, ஒரு போண்டாவில் பல்லி இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனை கண்ட 3 பேரும் வாந்தி எடுத்து, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 3 பேரையும் செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து, செந்துறை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் விசாரிக்கின்றனர்.

இந்திய தேர்தல் ஆணையம் வருகிற 2025 ஜனவரி 1ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த அக் 29ஆம் தேதி முதல் நவம்- 28ஆம்தேதி வரை சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள தெரிவித்துள்ளது.

The post செந்துறை டீ கடையில் பல்லி இருந்த போண்டா சாப்பிட்ட மூவர் மயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: