முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

சேலம், நவ.14:மேச்சேரி தி காவிரி நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு பிஎஸ்சி நர்சிங் மற்றும் டிப்ளமோ நர்சிங் (2024-25) மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. தி காவிரி கல்வி நிறுவனங்களின் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். நர்சிங் கல்லூரி முதல்வர் அமுதா வரவேற்றார். விழாவில் சேலம் ராமலிங்கம் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ரேஷ்மி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மாணவர்களுக்கு செவிலியரின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தனர். காவேரி கல்வி நிறுவனங்களின் கௌரவ தலைவர் டாக்டர் நடேசன், தலைவர் அன்பழகன், தாளாளர் ராமநாதன், துணைத்தலைவர் டாக்டர் மதன் கார்த்திக், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், தலைமை செயல் அலுவலர் டாக்டர் சண்முகநாதன், செயல் இயக்குனர் கருப்பண்ணன் ஆகியோர் விழாவில் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர். விழாவில், முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியை பிரியங்கா நன்றி கூறினார்.

The post முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: