- திருவிழா
- சிவகங்கை
- மருதுபாண்டியர் நகர் அரசு உயர்நிலைப்பள்ளி
- செயிண்ட் ஜஸ்டின் ஹை பள்ளி
- செயிண்ட் மைக்கேல் உயர்நிலைப்
- பரந்த கலை விழா
- தின மலர்
சிவகங்கை, நவ. 13: சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி, புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்றது. இப்போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 3000 மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர்.
போட்டியினை முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மாரிமுத்து, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) விஜய சரவணகுமார், மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க நிலை) செந்தில்குமரன், மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க நிலை) புவனேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய பயிற்றுநர், ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வருகின்ற 16ம் தேதி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோ செய்திருந்தார்.
The post மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி appeared first on Dinakaran.