தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம், நவ. 13: மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தகவல்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது, ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு 2025ம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படவுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் விருதை பெறுவதற்கு தகுதியான தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் சான்றோர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பப் படிவத்தை பெற்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகுதியுடைய நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து 27.11.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வழங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: