தேனி: தேனி நகர் சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து (35). இவர் 2010ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ராஜஸ்தானில் உள்ள ராம்கர் ஜெய்சல்மீர் என்ற இடத்தில் உள்ள முகாமில் நாயக்காக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 2020ல் மதுரையைச் சேர்ந்த ரீனாவுடன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
கடந்த மாதம் விடுமுறையில் தேனியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து தீபாவளியை கொண்டாடினார். பின்னர் ராஜஸ்தானில் உள்ள ராணுவ முகாமிற்கு சென்றார். கடந்த 10ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் ஜெய்சல்மீர் என்ற இடத்தில் நடந்த ராணுவ பயிற்சியின்போது வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, ராணுவ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் அவரது உடல் நேற்று மாலை சொந்த ஊரான தேனிக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு உறவினர்கள், குடும்பத்தினர், தேனி எம்பி தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் அஞ்சலி செலுத்தினர். தேனி நகராட்சி மயானத்தில் அரசு சார்பில் பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன் மரியாதை செலுத்தினார். பின்னர் விருதுநகர் எம்சிசி தலைமை நிர்வாக அலுவலர் கர்னல் ராகேஷ் சிங் தலைமையில் ராணுவ வீரர்களின் 21 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது.
The post தேனி ராணுவ வீரர் ராஜஸ்தானில் பலி: 21 குண்டுகள் முழங்க உடல் தகனம் appeared first on Dinakaran.