×

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் கணக்கிடும் பணி பெரணமல்லூர் அருகே

பெரணமல்லூர், நவ.13: பெரணமல்லூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் கணக்கிடும் பணி நேற்று தொடங்கியது. தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கீழ் செயல்படும் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து அதற்கான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு பகுதியில் அமைந்த நீல மேக சுவாமிகள் கோயில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடங்கள் மேல் புத்தூர் பகுதியில் உள்ளது. இந்நிலையில், நேற்று கோயில் நிலங்கள் தனி வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில் முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில் செயல் அலுவலர் ஹரிஹரன், மேலாளர் ஜெகதீசன், முன்னாள் அறங்காவல் குழு நிர்வாகிகள் தமிழ்செல்வன், செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தினை கண்டறிந்து அதற்கான அளவீடுகள் சரிபார்க்கப்பட்டது.

The post அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் கணக்கிடும் பணி பெரணமல்லூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Peranamallur ,Endowment Department ,Hindu Religious Charities ,Hindu Religious Endowment Department ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கோயில் யானைகளை...