×

மேட்டூர் அணையில் சதாசிவம் எம்எல்ஏ ஆய்வு

மேட்டூர், ஜன.1: மேட்டூர் அணையின் ராசயன கழிவு கலப்பு புகார் தொடர்பாக இடது கரையில் உள்ள 16 கண் பாலம் பகுதியை நேற்று பாமக எம்எல்ஏ சதாசிவம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் இருந்ததால் மலர்தூவி வணங்கினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 5 ஆண்டுக்கு முன்பு மேட்டூர் அணை வறண்டு போனதுண்டு. ஆனால், தொடர்ந்து 3 ஆண்டுகளாக மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. அணை நிரம்பியபோதும், உபரிநீர் திட்டத்தில் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுசெல்ல முடியாத வகையில் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணையில் சுமார் 1 கி.மீ., தொலைவிற்கு தண்ணீரில் ரசாயன கழிவுகள் கலந்துள்ளது. தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ளது, நீர்வளத்துறை அதிகாரிகளின் மெத்தன போக்கையே காட்டுகிறது.

தண்ணீரில் பாசி படர்ந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அவர்களை இந்த தண்ணீரை குடிக்க சொல்லுங்கள் பார்க்கலாம். நான் சட்டமன்றத்தில் பேசியும் பதில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post மேட்டூர் அணையில் சதாசிவம் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : MLA Sathasivam ,Mettur ,dam ,Mettur dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு: 10,000 கனஅடியாக உயர்வு