நாகர்கோவில், நவ.13 : குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (எம்.எல்) மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ் தலைமையில் எஸ்.பி.யிடம் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் வழிபாட்டுத் தல திருவிழாக்களில் ஒலிபெருக்கிகள் கட்டுப்பாடு இல்லாமல் வைக்கப்பட்டு வருகிறது. கூம்பு வடிவ ஒலி ெபருக்கிகளையும், சக்தி வாய்ந்த ஒலி அமைப்பு கொண்ட ஒலி பெருக்கிகளையும் பயன்படுத்துகிறார்கள். இதிலிருந்து வெளிப்படுகின்ற சப்தம் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையிலும் கேட்கிறது. தினசரி வழிபாட்டின் போதும் வழிபாட்டுத் தலங்களில் விருப்பம் போல கூம்பு வடிவ மற்றும் சக்தி வாய்ந்த ஒலி பெருக்கிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இதிலிருந்து வெளிப்படும் ஒலி மாசு காரணமாக நரம்பு மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகிறார்கள். பகலில் ஒலியின் அளவு 50 டெசிபல், இரவில் 45 டெசிபல் தான் இருக்க வேண்டும். சட்டமும் அதை வலியுறுத்துகிறது. எனவே குமரி மாவட்ட நிர்வாகம், காவல்துறை அதிக சக்தி வாய்ந்த ஒலி பெருக்கிகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
The post வழிபாட்டு தலங்களில் சக்தி வாய்ந்த ஒலி பெருக்கி பயன்படுத்த தடை appeared first on Dinakaran.