கொடைக்கானல் மலையில் நீளமான வாகனங்களுக்கு தடை

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பாதையில் நீளமான கனரக வாகனங்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் கொண்ட பயணிகள், சரக்கு வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீளமான வாகனங்கள் கொடைக்கானல் செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டி செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுநலன் கருதியும், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் நீளமான வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானல் மலையில் நீளமான வாகனங்களுக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: