சீர்காழி, நவ.12: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திமுக கட்சி அலுவலகத்தில் சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீர்காழி நகரம் சீர்காழி கிழக்கு சீர்காழி மேற்கு ஒன்றியம் , வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி, செம்பனார்கோயில் ஒன்றியம், ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வார்டுகளுக்கு வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம் மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்எல்ஏவும் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது. சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்துமகேந்திரன். ராமஇளங்கோவன், ஜீவிஎன் ரவி, மாவட்ட பொருளாளர் அலெக்சாண்டர், சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் தினேஷ் கலந்து கொண்டு ஆய்வு செய்தார் .மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் பேசுகையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். தமிழக முதல்வர் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் தர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வின்சென்ட், ஒன்றிய அவைத்தலைவர் நெடுஞ்செழியன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி பாஸ்கரன் மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன் ஒன்றிய கவுன்சிலர் விசாகர் , நிர்வாகிகள் ஜிபையர் அகமது , ஜீவராஜ், மணிமாறன், குலோத்துங்கன், சசிகுமார் ,குகன், சரவணன், செந்தில், தினகரன் ,மற்றும் மாநில, மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
The post சீர்காழியில் திமுக சார்பில் வாக்குச்சாவடி நிலைய முகவர்கள்ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.