×

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சியினர் கைது

 

ஈரோடு, ஜன. 1: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை விடுவிக்கக்கோரி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், நாம் தமிழர் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனடிப்படையில், ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் தாண்டவமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அக்கட்சியினரை ஈரோடு தெற்கு போலீசார் கைது செய்தனர். இதில், 41 பேர் கைது செய்யப்பட்டு ஈரோடு பூந்துறைரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

The post தடையை மீறி ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சியினர் கைது appeared first on Dinakaran.

Tags : Naam Tamilar Party ,Erode ,Chennai ,Anna University ,Seeman ,Dinakaran ,
× RELATED 100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்