ஈரோடு, டிச. 30: ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டு மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், ஆப்பக்கூடல் கம்மநாயக்கன்பாளையம் சலையில் மது விற்பனையில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (24), மலையம்பாளையத்தில் கொடுமுடியை சேர்ந்த சேதுபதி (31), கடத்தூரில் பவானியை சேர்ந்த ராஜமாணிக்கம் (37) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பவானி அருகே ஜம்பையில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றதாக அதேபகுதியை சேர்ந்த தனபால் (51), என்பவரை பவானி போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 12 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். குட்கா, புகையிலை பொருட்களை விற்றதாக பவானிசாகரில் வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த புருஸ்லி (45), ஈரோடு மாதவகிருஷ்ணா வீதியில் கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த சுந்தரம் மனைவி சாந்தி (54), அதே பகுதியில் ராமசாமி (63), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ எடையிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
The post மது, லாட்டரி, குட்கா விற்ற 7 பேர் கைது appeared first on Dinakaran.