×

சினிமா துணை நடிகை வீட்டில் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

 

அம்பத்தூர்: சினிமா துணை நடிகை வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியை சேர்ந்தவர் தீபா (35). இவர், துணை நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, தீபா தனது குழந்தைகளை அதே பகுதியில் உள்ள டியூஷனில் விடுவதற்கு வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னலில் மாட்டி விட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து, வீட்டிற்கு வந்த தீபாவின் கணவர், வீட்டின் கதவு திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்துள்ளது. பீரோவில் உள்ள லாக்கர் மட்டும் உடைக்கப்படவில்லை. அதில் இருந்த நகை மற்றும் பணம் தப்பியது. உடனே தீபாவுக்கு போன் செய்த போது பதறி போன தீபா வீட்டிற்கு வந்து பார்த்தார்.

அப்போது, பீரோவில் வைத்திருந்த ரூ.5000த்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து தீபா அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post சினிமா துணை நடிகை வீட்டில் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Robbery ,Ampathur ,Deepa ,Razak Garden ,Arumbakkam, Chennai ,
× RELATED உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு...