- கோயம்புத்தூர்
- செல்வராஜ்
- ஆர்.எஸ்.புரம்
- சட்டமன்ற உறுப்பினர்
- துணை செயலாளர்
- தி.மு.க.வின் தலைமையக செய்தித் தொடர்பு
- வெங்கட்ரம்
- பவித்ரா
- திருப்பதி
- முதல் அமைச்சர்
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் கோவை செல்வராஜ் (66). முன்னாள் எம்.எல்.ஏ. இவர், திமுக தலைமைக்கழக செய்தி தொடர்பு துணை செயலாளராக இருந்து வந்தார். இவரது மூன்றாது மகன் வெங்கட்ராமுக்கும்- பவித்ராவுக்கும் திருப்பதியில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. நேற்று அங்கேயே திருமண வரவேற்பு விழாவும் நடந்தது. அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுபெற்றவுடன் மணமக்கள் மற்றும் இருவீட்டாரின் பெற்றோர் காரில் கோவை திரும்புவதற்காக மலையில் இருந்து கீழே இறங்கினர்.
அப்போது, கோவை செல்வராஜ்-க்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு கோவையில் இன்று நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக செய்தித் தொடர்பு துணைச் செயலாளருமான கோவை செல்வராஜ் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, கழகத்தின் கொள்கைகளை, கருத்துகளை விவாதங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் ஆணித்தரமாக எடுத்து வைத்தவர். சமீபத்தில் நான் கோவை சென்றிருந்த போது, மகனின் திருமணத்தை வைத்திருக்கிறேன். திருமணம் முடிந்து மணமக்களுடன் வந்து தங்களிடம் சென்னையில் வாழ்த்து பெறுகிறேன் என்றார்.
ஆனால் மகனின் திருமணம் நடந்தேறி வந்து கொண்டிருந்தபோதே, அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி, என்னை ஆழ்ந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. கோவை செல்வராஜ் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
The post கோவை செல்வராஜ் திடீர் மரணம்: முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.