தேனியில் பரபரப்பு மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்கள் 50 பேர் கைது

தேனி, நவ. 8: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் தேனியில் நடந்த மறியல் போராட்டத்தில் 50 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், தேனி நகர் பங்களாமேட்டில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாநில பொருளாளர் பொன்அமைதி தலைமை வகித்தார்.

இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது, பொதுவிநியோகத் திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும், பொட்டல முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மறியல் போராட்டம் நடந்ததையடுத்து, தேனி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர்.

The post தேனியில் பரபரப்பு மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்கள் 50 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: