அனைத்து விவசாயிகளும் பயிர்க்கடன் பெறலாம்

 

ராமநாதபுரம், நவ.8: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் தற்போது பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் நடப்பாண்டிற்கான மூவிதழ் அடங்கல் சான்று. மத்திய கூட்டுறவு வங்கி கணக்கு புத்தகம் 10(1) சிட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் 4 பாஸ்போர்ட் புகைப்படம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி கடன் பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர் கடன் பெறுவதில் காலதாமதம் ஏற்படின் கீழ்க்கண்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். பரமக்குடி வட்டாரம் – 90806 87859. கமுதி வட்டாரம். கடலாடி வட்டாரம் போகலூர் வட்டாரம் 63806 34983. நயினார்கோவில் மற்றும் 88701 00565. முதுகுளத்தூர் வட்டாரம் 63836 55852, ராமநாதபுரம் வட்டாரம் 97903 81412. மண்டபம் வட்டாரம் 99522 06840. திருப்புல்லாணி வட்டாரம் -90031 64644. திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்களம் வட்டாரம் -88386 68780. ராமநாதபுரம் சரக துணைப்பதிவாளர் 73387 21602. பரமக்குடி சரக துணைப்பதிவாளர் 73387 21603. மண்டல இணைப்பதிவாளர் 73387 21600 என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post அனைத்து விவசாயிகளும் பயிர்க்கடன் பெறலாம் appeared first on Dinakaran.

Related Stories: