×

இந்து கோயில்கள் மீது தாக்குதலை நிறுத்தாவிட்டால் பிரதமர், முதல்வர் பதவிக்கு அச்சுறுத்தல் ஏற்படும்: ஆந்திராவில் பெண் அகோரி ஆவேசம்


திருமலை: ஆந்திர மாநிலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராமச்சந்திராபுரம் பீமேஸ்வர சுவாமி கோயிலுக்கு பெண் அகோரி நேற்று வந்தார். அப்போது பீமேஸ்வர சுவாமியை தரிசித்தார். இந்நிலையில் பெண் அகோரியை காண பக்தர்கள் திரண்டனர். பீமேஸ்வர சுவாமியை தரிசனம் செய்து விட்டு காக்கிநாடா பீடத்திற்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர் பொது மக்களிடம் பேசுகையில், ‘இந்து சனாதன தர்மத்தைப் பாதுகாக்கவும், பசுக் கொலைகள், சிறுமிகள் மீதான தாக்குதல், இந்துக் கோயில்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும். முதல்வராகட்டும், பிரதமராகட்டும் இந்த தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் அவர்கள் பதவிக்கு அச்சுறுத்தல் ஏற்படும். என் முன் எவருக்கும் பலனில்லை, கட்டாயம் அந்த பதவிகளை பறிக்க செய்வேன் ’ என்றார்.

The post இந்து கோயில்கள் மீது தாக்குதலை நிறுத்தாவிட்டால் பிரதமர், முதல்வர் பதவிக்கு அச்சுறுத்தல் ஏற்படும்: ஆந்திராவில் பெண் அகோரி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : PM ,Chief Minister ,Female Agori ,Andhra Pradesh ,Tirumala ,Agori ,Ramachandrapuram Bhimeswara Swamy Temple ,Dr. PR Ambedkar Konaseema District, Andhra Pradesh ,Bhimeswara Swamy ,Andhra ,
× RELATED சொல்லிட்டாங்க…