×

ஒடிசாவில் ஓடும் ரயில் மீது துப்பாக்கிச் சூடு


புரி: ஒடிசாவில் விரைவு ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி ஆனந்த் விஹார்- ஒடிசாவின் புரி இடையிலான நந்தன்கனன் விரைவு ரயில், ஒடிசாவின் பத்ராக் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பவுத்பூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ரயிலை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதுடன், இரும்புத் துண்டுகள், கம்பிகள் உள்ளிட்டவற்றையும் வீசினர். இதனால் துப்பாக்கி குண்டுகள் சில, ரயில் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தன.

அதிர்ஷ்டவசமாக பயணிகள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாயவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில் மீது தாக்குதல் நடத்திய கும்பல், அங்கிருந்து தப்பியோடிவிட்டது. பின்னர் கூடுதல் பாதுகாப்புடன் மேற்கண்ட ரயில் புரி நகருக்கு புறப்பட்டுச் சென்றது. குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஒடிசாவில் ஓடும் ரயில் மீது துப்பாக்கிச் சூடு appeared first on Dinakaran.

Tags : Odisha ,Buri ,Delhi ,Anand ,Rapid Train ,Puri, Odisha ,Badrak Railway Station, Odisha ,
× RELATED அசாம் மாநிலம் போல ஒடிசா மாநிலத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை