×

ராஜஸ்தானில் 25 புலிகள் மாயம்


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ரன்தம்போர் தேசியப்பூங்காவில் கடந்த ஆண்டு மட்டும் 25 புலிகள் காணாமல் போயுள்ளதாக வனவிலங்கு தலைமை காப்பாளர் பவன்குமார் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் ரன்தம்போர் தேசியப்பூங்காவில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் 2022ம் ஆண்டு வரை 13 புலிகள் காணாமல் போயிருந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல்முறையாக இதுவரை இல்லாத வகையில் மொத்தமுள்ள 75 புலிகளில் 25 புலிகள் காணாமல் போயுள்ளன. காணாமல் போன புலிகள் குறித்த விசாரணை நடத்துவதற்கு மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு பூங்காவில் உள்ள கண்காணிப்பு பதிவுகளை மதிப்பாய்வு செய்யும். இதில் புலிகள் காணாமல் போனது தொடர்பாக பூங்கா அதிகாரிகளின் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனவிலங்கு தலைமை காப்பாளர் தெரிவித்துள்ளார்.

The post ராஜஸ்தானில் 25 புலிகள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Rajasthan Jaipur ,Ranthambore National Park ,Rajasthan ,Chief Wildlife Conservator ,Pawan Kumar ,
× RELATED தமிழக ராணுவ வீரர் ராஜஸ்தானில் வீர மரணம்