புதுடெல்லி: போலி சேர்க்கைக்கு எதிரான நடவடிக்கையாக சிபிஎஸ்இயில் சேர்க்கப்பட்டு இருந்த 21 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள பல சிபிஎஸ்இ பள்ளிகளில் குளறுபடிகள் கண்டறியப்பட்டது. ஆய்வுகளின்போது கவனிக்கப்பட்ட முறைகேடுகள் அந்தந்த பள்ளிகளுக்கு அறிக்கையாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பள்ளிகள் சமர்பித்த பதில்கள் சிபிஎஸ்இயால் ஆராயப்பட்டன. இதனை தொடர்ந்து 21 பள்ளிகள் சிபிஎஸ்இயில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ செயலாளர் ஹிமான்ஷூ குப்தா கூறுகையில், ‘‘போலி மாணவர் சேர்க்கை என்பது பள்ளிக்கல்வியின் முக்கிய நோக்கத்திற்கு எதிரானது என்று அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து போலி சேர்க்கைக்கு எதிரான நடவடிக்கையாக மத்திய இடைநிலைக்கல்வி வாரியமான சிபிஎஸ்இயில் இருந்து 21 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 பள்ளிகள் சீனியர் செகன்டரி தரத்தில் இருந்து செகன்டரி நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளது” என்றார்.
The post போலி மாணவர் சேர்க்கை: 21 சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரம் ரத்து appeared first on Dinakaran.