டெல்லி: டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் மருத்துவமனைகளில் சுவாசகோளாறு உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேளாண் கழிவுகளை எரித்தல், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அக்டோபர் மாதத்தில் இந்தியாவிலேயே டெல்லியின் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. காற்றில் உள்ள நுண்துகள்களில் μm 2.5 என்பதை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் காற்றின் தர குறியீட்டில் 10 சதவிகிதம் மட்டுமே வேளாண் கழிவுகளை எரித்தல் மூலம் மாசுபட்டதாக டெல்லியின் காற்றின் தர மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
காற்றின் தரம் நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாசப்பிரச்சனை, ஆஸ்துமா, தலைவலி, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிவருகின்றனர். இந்த அறிகுறிகளுடன் பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற தொடங்கியுள்ளனர். இதனால் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு நுறையீரல் சம்பந்தபட்ட நோய் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
The post டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்: மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.