சிக்காத சிறுத்தை மாற்று இடத்தில் கேமரா வைக்க வனத்துறை முடிவு

ஸ்ரீவில்லிபுத்தூர், நவ.6: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுத்தை தொடர்பான காட்சிகள் பதிவாகாததால் கேமராவை மாற்று இடத்தில் வைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்பு கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை சிறுத்தை ஒன்று அடித்துக் கொன்றது. இது தொடர்பாக விவசாயிகள் ரேஞ்சர் செல்லமணி மற்றும் பாரஸ்டர் கார்த்திக் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கன்று குட்டியை கொன்ற சிறுத்தையை கண்காணிக்க இரண்டு கேமராக்களை பொருத்தியிருந்தனர்.

மூன்று தினங்களாக கேமரா பொருத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று எடுத்து பார்த்தனர். அப்போது சிறுத்தை தொடர்பாக எந்த காட்சியும் பதிவாகவில்லை. இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணிப்பதற்காக கேமராவை மாற்று இடத்தில் வைக்க ஆலோசனை செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

The post சிக்காத சிறுத்தை மாற்று இடத்தில் கேமரா வைக்க வனத்துறை முடிவு appeared first on Dinakaran.

Related Stories: