×

2 மாஜி ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் கடந்த 2015ம் ஆண்டு பொது விநியோகத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான நோடல் ஏஜென்சியான சிவில் சப்ளை கார்ப்பரேஷன் அதிகாரிகள் 25 வளாகங்களில் ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ₹3.64 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அரிசி, உப்பு மாதிரிகளை சோதனை செய்ததில் அவை தரமற்றது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக மாநில அரசு அதிகாரிகள் அனில் துடேஜா, அலோக் சுக்லா உட்பட 18 அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு பிரிவு குற்றம்சாட்டியது.

அப்போதைய மாநில அரசின் செல்வாக்கு மிக்க அதிகாரிகளாக இருந்த இருவரும் தங்களது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், அப்போதைய அட்வகேட் ஜெனரல் வர்மாவுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் அமலாக்கத்துறை அளித்த அறிக்கை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளான அனில் துடேஜா மற்றும் அலோக் சுக்லா, அட்வகேட் ஜெனரல் சதீஷ் சந்திர வர்மா மீது நேற்று முன்தினம் ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.

 

The post 2 மாஜி ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : IAS ,RAIPUR ,Civil Supply Corporation ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் படைகள்...