×
Saravana Stores

ஒருசார்பாக தகவல்கள் வெளியீடு விக்கிபீடியாவுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ்: வெளியீட்டாளராக ஏன் கருதக்கூடாது என கேள்வி

புதுடெல்லி: இலவச ஆன்லைன் கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் பல்வேறு தகவல்கள் ஒருசார்பாகவும், துல்லியமில்லாமலும் இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக ஒன்றிய அரசு விக்கிபீடியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை விடுத்த நோட்டீசில், ‘விக்கிபீடியாவில் வெளிவரும் தகவல்கள் ஒருசார்பாகவும், துல்லியமில்லாமலும் இருப்பதாக பல புகார்கள் வருகின்றன. எனவே விக்கிபீடியாவை இடைத்தரகாக இல்லாமல், ஏன் வெளியீட்டாளராக கருதக்கூடாது?’ என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு விக்கிபீடியா நிறுவனத்தின் பதிலைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தனியார் செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏஎன்ஐயின் விக்கிபீடியா பக்கத்தில் ‘ஏஎன்ஐ இந்தியாவில் ஆளும் அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கும் கருவியாக செயல்படுகிறது’ என குறிப்பிட்டுள்ளது.

இதை எதிர்த்து ஏஎன்ஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த விசாரணையில், ‘ஏஎன்ஐ நிறுவனம் குறித்த தவறான தகவலை எழுதியவர்கள் யார் என்கிற தகவலை விக்கிபீடியா தர மறுப்பது ஏன்? சம்மந்தப்பட்ட பக்கத்தை வேறு யாரும் திருத்த அனுமதிக்காதது ஏன்? இந்தியாவின் சட்டங்களுக்கு விக்கிபீடியா இணங்க விரும்பாவிட்டால், அந்நிறுவனத்தை இந்தியாவில் தடை செய்ய ஒன்றிய அரசு பரிந்துரைக்கட்டுமா?’ என நீதிபதிகள் சரமாரி கண்டனம் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ஒருசார்பாக தகவல்கள் வெளியீடு விக்கிபீடியாவுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ்: வெளியீட்டாளராக ஏன் கருதக்கூடாது என கேள்வி appeared first on Dinakaran.

Tags : Union government ,Wikipedia ,New Delhi ,Union Department of Information and Broadcasting ,
× RELATED அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு ரத்து மதரசா...