×

அருமனை அருகே வீடு புகுந்து முதியவர் மீது தாக்குதல்

*கழிவறையில் பதுங்கிய கும்பலை சிறைபிடித்த பொதுமக்கள்

அருமனை : அருமனை அருகே மாரப்பாடி பெருங்கூர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பென்சாம் (57). அவரது மகன் பெரின். இவருக்கும், முழுக்கோடு பந்தல்விளை பகுதியை சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் என்பவரது மகளுக்கும் திருமணம் நடந்தது. தற்போது பெரினுக்கு குழந்தை பிறந்து நூல்கட்டு விழா முழுக்கோடு பகுதியில் உள்ள தாய் வீட்டில் நடைபெற்றது.

இந்தநிலையில் பெரினுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நூல்கட்டு விழாவில் விருந்து முடிந்ததும் ஜான் கிறிஸ்டோபரின் மகன் ஆதார்ஷ் மோன் (27), ஸ்டாலின், நவீன் (24) ஆகியோர் காரில் மாரப்பாடிக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் திடீரென பென்சாம் வீட்டுக்குள் புகுந்து பெரினை தேடினர். ஆனால் அங்கு அவர் இல்லாததால் பென்சாமை தாக்க தொடங்கினர். பென்சாமின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனால் பயந்துபோன காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆதார்ஷ்மோன் ஸ்டாலின், நவீன் ஆகியோர் மட்டும் அங்குள்ள கழிவறையில் பதுங்கினர்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் கழிவறையின் வெளிப்புற கதவை பூட்டினர். மேலும் வந்தவர்கள் திருடர்கள் என நினைத்து ஆதார்ஷ்மோன் தரப்பினர் வந்த காரை அடித்து சேதப்படுத்தினர்.
இது குறித்து பென்சாம் அருமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தங்கையின் கணவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய ஆதார்ஷ்மோன், ஸ்டாலின், நவீன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அருமனை அருகே வீடு புகுந்து முதியவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Arumana ,Aruman ,Bensam ,Marapadi Berungur ,Berin ,John Christopher ,Pandalville ,Arumani ,Dinakaran ,
× RELATED அருமனை அருகே பல வருடமாக சாலையோரம் கிடக்கும் மரத்தால் விபத்து அபாயம்