×
Saravana Stores

பழுதான சாலையால் பொதுமக்கள் அவதி

 

இளம்பிள்ளை, நவ.5: இளம்பிள்ளை‌ அடுத்த தப்பக்குட்டை சாலை வழியாக வடுகப்பட்டி பகுதிக்கு காவிரி குடிநீர் செல்ல பெரிய பைப்லைன் அமைக்க, தார் சாலையினை வெட்டினர். அதன் பின்னர், இந்த சாலையினை சீர் செய்யாமல், கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளனர். இதனால், சாலையில் மண் கற்கள் பரவியுள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

சாலையை சீரமைக்க கோரி நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை தகவல் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே, இந்த சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து, விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழுதான சாலையால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Umagpillai ,Cauvery ,Vadugapatti ,Tappakuttaya road ,
× RELATED 5 ஆண்டுகளுக்கு பின் உத்திர காவிரி...