×

அரைத்த மாவை அரைக்கும் விஜய் கட்சி கொள்கை: முத்தரசன் தாக்கு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க மறுக்கிறது. நகை கடன் கூட கொடுப்பதில்லை. அரசு உடனடியாக தலையிட்டு வங்கிகளின் மூலமாகவும் விவசாய கடன், நகை அடகு வைத்தால் கடன் வழங்க உறுதி செய்ய வேண்டும்.

தொடக்கப்பள்ளிகளை மற்ற பள்ளிகளோடு இணைப்பது என்ற ஒரு பிரச்னை வருகின்றது. அதனை தவிர்க்கப்பட வேண்டும். விஜய் கட்சியின் கொள்கை என்பது ஏற்கனவே அரைக்கப்பட்ட மாவை அரைத்தது போல உள்ளது. மாவு தான் வீணாகும். திமுகவை குறை சொல்லதான் அவர் கட்சி தொடங்கியுள்ளார்.

 

The post அரைத்த மாவை அரைக்கும் விஜய் கட்சி கொள்கை: முத்தரசன் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Vijay party ,Mutharasan Thaku ,CHENNAI ,State Secretary of the ,Communist Party of India ,Mutharasan ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...