- குகேஷ்
- மனுபக்கர்
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- காங்கிரஸ்
- செல்வப்பெருந்தக
- யூனியன் அரசு
- டி. குகேஷ்
- மனு
- தமிழ்நாடு…
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது, தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் உள்பட 4 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய விளையாட்டுத்துறை இதை அறிவித்துள்ளது.
ஜனவரி 17ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்குகிறார். ஒன்றிய அரசின் விளையாட்டுத்துறை வழங்கும் உயரிய விருதான கேல் ரத்னா விருது பெற்றுள்ள டி.குகேஷ், மனுபாக்கர் உள்ளிட்டவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post கேல் ரத்னா விருது பெறும் குகேஷ், மனுபாக்கருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து appeared first on Dinakaran.