சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: நீர் நிலைகளைப் பாதுக்கத்திட வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடையே விதைத்திட அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒருவர் என 38 பேருக்கு முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர்” விருதும், ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். இந்த விருதிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் “தமிழ்நாடு விருதுகள் (TN Awards)” (http://awards.tn.gov.in) வலைதளம் மூலம் நேற்று முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் 17ம் தேதி ஆகும். இவ்விருது குறித்த விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, எண்1, ஜீனிஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை- 600015, தொலைபேசி எண்: 044 – 24336421 மின்னஞ்சல் முகவரி:tnclimatechangemission@gmail.com வலைதளம்: http://www.environment.tn.gov.in/ மற்றும் https://tnclimatechangemission.in/. இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.