×

ஒன்றிய அரசின் விருதுகள் பெற்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஒன்றிய அரசின் விருதுகள் பெற்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் விருதுகள் பெற்ற தமிழ்நாட்டு விளையாட்டு, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தளப் பதிவு: தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு ஒன்றிய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி!. கேல் ரத்னா விருது பெற்றுள்ள குகேஷ் மற்றும் அர்ச்சுனா விருது பெற்றுள்ள துளசிமதி, நித்ய, மனிஷா ராமதாஸ் மற்றும் அபய்சிங் ஆகியோருக்கு என் வாழ்த்துகள், வெற்றிகள் தொடரட்டும். தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.

மகிழ்ச்சி அளிக்கிறது துணை முதல்வர்
கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: நமது உலக செஸ் சாம்பியன் குகேஷ் விளையாட்டுத்துறையில் நாட்டின் உயரிய விருதான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா 2024க்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, இந்தியா சார்பில் பாராலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த நம் தங்கைகள் துளசிமதி முருகேசன், நித்ய  சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருது வழங்கப்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

The post ஒன்றிய அரசின் விருதுகள் பெற்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Nadu ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள்,...