- பாஜக
- ஜார்கண்ட் முக்தி
- மோர்சா
- ஜார்க்கண்ட்
- ஜார்க்கண்ட் முக்தி மோர்சா
- அம்மான்ஸ்டேட்
- முதல் அமைச்சர்
- ஹேமந்த் சோரன்
- பக்ரத்
- ஜார்க்கண்ட் சட்டமன்றம்
- தின மலர்
ஜார்க்கண்ட்: அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாதவர்களை வீழ்த்த பாஜக சதி திட்டங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளது என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா குற்றம்சாட்டியுள்ளது. ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பக்ரேட் தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தேர்தலில் ஹேமந்த் சோரனின் வேட்புமனுவை முன்மொழிந்த மண்டல் முன் என்பவர் கடந்த அக்டோபர் 27ம் தேதி பாஜகவினரால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் சிவராஜ்சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவர் மனோஜ் பாண்டே பாஜகவின் செயல்பாடுகள் அக்கட்சியின் பலவீனத்தையே காட்டுவதாகவும். அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாதவர்களுக்கு எதிராக பாஜக சதி செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய பாஜக மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில் வேட்பு மனுவை முன்மொழிந்தவரை மிரட்டி பாஜகவில் இணைத்துள்ளதாகவும் மணீஷ் பாண்டே புகார் கூறியுள்ளார்.
The post அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாதவர்களை வீழ்த்த பாஜக சதி திட்டங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளது: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா குற்றசாட்டு appeared first on Dinakaran.