×

போட்ஸ்வானா புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் அண்மையில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் டுமா போகோ தலைமையிலான ஜனநாயக மாற்றத்துக்கான குடை என்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் போட்ஸ்வானா நாட்டில் 58 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு டுமா போகோ அதிபராக பதவி ஏற்றார்.

இதையடுத்து டுமா போகோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தன் எக்ஸ் தள பதிவில், “போட்ஸ்வானா அதிபராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். உங்களுக்கு சிறந்த பதவிக்காலம் அமைய வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

The post போட்ஸ்வானா புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Botswana ,New Delhi ,Umbrella ,Democratic Change ,Duma Boko ,Modi ,Dinakaran ,
× RELATED மீண்டும் மீண்டும் துரோகம் இழைப்பதால்...