ராஞ்சி: ஜார்க்கண்சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜ தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ‘‘ஜார்க்கண்டின் அடைபாஜ ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். அந்த வரம்பில் இருந்து பழங்குடியினருக்கு விலக்கு அளிக்கப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் பழங்குடியினர் உரிமைகள்,கலாசாரம் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படும் என முதல்வர் ஹேமந்த் சோரன் தவறாக பிரசாரம் செய்கிறார்.
பழங்குடியினர் நலன்கள் பாதிக்காத வகையில் சட்டம் செயல்படுத்தப்படும்’’ என்றார். சத்ரா மாவட்டம், சிமரியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், ‘‘ கடந்த 5 ஆண்டுகளில் ஜார்க்கண்டில் நக்சல் அட்டூழியம் ஒழிக்கப்பட்டது. அதே போல் 2026க்குள் நாடு முழுவதிலும் இருந்து நக்சலைட் தீவிரவாதத்தை ஒழிக்க பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளது. அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகள் அடிப்படையில் ஜார்கண்டில் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் 52ல் பாஜ வெற்றி பெறும்’’ என்றார்.
The post 2026க்குள் நக்சலைட் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: ஜார்க்கண்டில் அமித் ஷா உறுதி appeared first on Dinakaran.