×

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 3 மாதங்களுக்குப் பின்னர் உடல் பாகம் கண்டுபிடிப்பு

திருவனந்தபுரம்: கடந்த ஜூலை 31ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் சூரல்மலை மற்றும் முண்டக்கை ஆகிய இடங்களில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 420க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இந்நிலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அடர்ந்த வனப்பகுதியான பரப்பன்பாறை என்ற இடத்தில் ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் நேற்று ஒரு உடல் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது நிலச்சரிவில் சிக்கியவரின் உடல் பாகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து அறிந்ததும் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப்படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று அந்த உடல் பாகத்தை மீட்டனர். இந்த உடல் பாகத்தை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 3 மாதங்களுக்குப் பின்னர் உடல் பாகம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Thiruvananthapuram ,Suralmalai ,Mundakai ,Wayanad district ,
× RELATED வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு; தீவிர...