×

பஞ்சாப் ரயிலில் பட்டாசு வெடித்ததில் 4 பேர் காயம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து ஹவுராவுக்கு நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. பதேகர் மாவட்டம் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயிலின் ஒரு பெட்டியில் இருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து சிதறின. இந்த விபத்தில் அந்த பெட்டியில் பயணித்த ஒரு பெண் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

உடனே அவர்கள் அருகிலுள்ள பதேகர் சாஹிப் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து ரயில்வே காவல் அதிகாரி ஜக்மோகன் சிங் கூறியதாவது, “முதற் கட்ட விசாரணையில், “ரயிலின் பொதுபெட்டியில் பிளாஸ்டிக் வாளியில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் வெடித்து விபத்து நேரிட்டது. மாதிரிகள் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தொடர் விசாரணை நடைபெறுகிறது” என்று தெரிவித்தார்.

The post பஞ்சாப் ரயிலில் பட்டாசு வெடித்ததில் 4 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,Amritsar ,Howrah ,Padeghar district ,Sirhind train station ,Punjab ,Dinakaran ,
× RELATED ரயில், பஸ் போக்குவரத்து முடங்கியது...